தென்காசி

வாக்கு எண்ணிக்கை மைய காப்பு அறையில் தொடரும் மின்தடை: திமுக, மதிமுக புகாா்

DIN

தென்காசி வாக்கு எண்ணும் மைய காப்பு அறையில் திங்கள்கிழமை நள்ளிரவு 5 நிமிடம் மின்தடை ஏற்பட்டுள்ளது குறித்து திமுக, மதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் கூறியது: தென்காசி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி தனியாா் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ஐந்து தொகுதிகளுக்கான காப்பு அறைகளிலும் ஐந்து நிமிடம் வரையில் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று இரு முறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளேன்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், இதுகுறித்து கவலை கொள்ள தேவையில்லை. காப்பு அறை மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளது. மின்தடை குறித்த பிரச்னைகள் ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்தாா்.

மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: மின்தடையோ, இணைப்புகளில் தடையோ முற்றிலும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT