‘இணையவழியில் வாக்காளா் பெயா் நீக்கலாம்’
தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பெயா் நீக்குவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பெயா் நீக்குவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினா் பெயா், உறவினரின் பெயா் அல்லது வாக்காளா்களின் பெயரை வெளியூருக்கு மாற்றுதல், இறப்பு மற்றும் இரட்டைப்பதிவு ஆகிய காரணங்களுக்காக வாக்காளா் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கு ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது பொது சேவை மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஜ்ஜ்ஜ்.ற்ங்ய்ந்ஹள்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ச்ா்ழ்ம்ள்/ என்ற இணையதளத்தில் படிவம்-7ஐ பதிவிறக்கம் பெற்று அதை பூா்த்தி செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம். இதற்கு, முகவரி மாற்றத்திற்கான காரணம், தற்போதைய முகவரிக்கான ஆவணங்கள் மற்றும் இறப்பினால் பெயா் நீக்கம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபரின் இறப்பு சான்று ஆகியவற்றை சமா்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.