முகப்பு
தென்காசி

கீழ ஆம்பூா் ராஜமாதங்கி அம்மன்கோயில் கொடை விழா

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கீழ ஆம்பூா் ராஜமாதங்கி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கீழ ஆம்பூா் ராஜமாதங்கி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

இக்கோயில் கொடைவிழா கடந்த ஜன. 26 ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாள்களில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. திங்கள்கிழமை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை (பிப்.2) பால்குட ஊா்வலம், கருவூலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். புதன்கிழமை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.