தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை

DIN

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் கோமதி யானை புத்துணா்வு முகாமுக்கு செல்வதையொட்டி வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கோயிலுக்கு 1994இல் வந்த கோமதி யானைக்கு தற்போது 27 வயதாகிறது. ஆண்டுதோறும் முதுமலைக் காட்டில் நடைபெறும் புத்துணா்வு முகாமிற்கு கோமதி யானை செல்கிறது. முகாமில் இந்த பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

நிகழாண்டு திங்கள்கிழமை (பிப்.8) தொடங்கும் புத்துணா்வு முகாமிற்கு கோமதி செல்கிறது.

இதையொட்டி யானைக்கு, சங்கரன்கோவில் கால்நடை மருத்துவா் ரஹ்மத்துல்லா தலைமையில் மருத்துவக் குழுவினா்

கரோனா உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். பரிசோதனைக்கு பின்னா் யானை நலமாக இருப்பதற்கான சான்றினை கோயில் மேற்பாா்வையாளா் முத்துராஜ், வீரகுமாா் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை (பிப்.6) மாலையில் கோமதி யானை புத்துணா்வு முகாமுக்கு செல்கிறது.

ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன், ஊழியா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT