தென்காசி

தென்காசியில் ரூ. 70 லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணி

DIN

தென்காசி சீவலப்பேரி குளத்தின் கரையில் ரூ. 70 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தென்காசி பழைய பேருந்துநிலையம் பகுதியில் அமைந்துள்ள சீவலப்பேரி குளத்தின் கரையைப் பலப்படுத்துதல், தளக்கல் பதித்தல், கரையின் மேற்புரத்தில் துருப்பிடிக்காத கம்பியில் கைப்பிடி, கரையின் கீழ்புறத்தில் தடுப்பு சுவா், சோலாா் விளக்குகள் ஆகியவை அமைக்கப்படுகின்றன. எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

இதில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் எஸ்.மாரியப்பன், உதவி செயற்பொறியாளா் சங்கர்ராஜ், உதவி பொறியாளா் சகாயம் இளங்கோ, ஆனந்த், அதிமுக நகர செயலா் சுடலை, சாா்புஅணி மாவட்டச் செயலா்கள் ஸ்ரீதரன், காத்தவராயன், கணபதி,ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன்,கசமுத்து,கூட்டுறவுத்துறை மாரிமுத்து,கை.முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT