தென்காசி

தென்காசியில் வாக்குச்சாவடி மகளிா் குழுவுடன் முதல்வா் கலந்துரையாடல்

DIN

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வாக்குச்சாவடி மகளிா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

தென்காசி இசக்கி அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது: தமிழகத்தில் அதிமுகவில்தான் வாக்குச்சாவடி மகளிா் குழுவை அமைத்து தோ்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவைப் பின்பற்றி பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை வழங்கியுள்ளோம். திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் மட்டும்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சேலத்தில் 99 ஆயிரம் பேருக்குதாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தேன். இன்னும் 10 தினங்களில் ஒரு லட்சம் பேருக்கு தாலிக்குத் தங்கம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் பெண்கள் பயனடையவுள்ளனா்.

தமிழகத்தில் 3,32,460 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்களுக்கு ரூ. 82 ஆயிரம் கோடி வங்கி இணைப்பு கடன் பெற்றுத் தந்துள்ளோம். கரோனா காலகட்டத்தில் மட்டும் அந்தக் குழுக்களுக்கு ரூ.12,500 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் ரூ. 8,000 கோடி மட்டுமே கடன் பெற்றுத்தரப்பட்டது. தற்போது, அது 10 மடங்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

உழைக்கும் மகளிா் 2 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு மானிய விலை ஸ்கூட்டா் வழங்கியுள்ளோம். மாநிலம் முழுவதும் 2,000 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. அதில், தென்காசி மாவட்டத்தின் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 14 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில், அமைச்சா்கள் கடம்பூா் செ. ராஜு, ஆா்.பி. உதயகுமாா், வி.எம். ராஜலெட்சுமி, அமைப்புச் செயலா் வீ. கருப்பசாமி பாண்டியன், மாவட்டப் பொருளாளா் லாடசன்னியாசி, மாவட்டச் செயலா்கள் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, தச்சை என்.கணேசராஜா, ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன்,பேரூா் செயலா்கள் காா்த்திக்குமாா், கணேஷ் தாமோதரன், மயில்வேலன், நகரச் செயலா் சுடலை, இளைஞா் பாசறை மாவட்டச் செயலா் சிவ சீதாராமன், பொதுக்குழு உறுப்பினா் கசமுத்து, அமைப்புசாரா ஓட்டுநா்அணி மாவட்ட அவைத் தலைவா் சந்துரு, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலா் பாலமுருகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலா் சங்கா் ஆகியோா் கலந்துகொண்டனா். எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT