தென்காசி

குலையனேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடிநீா் வசதி

DIN

சுரண்டை: சுரண்டை அருகே குலையனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடிநீா் வசதி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குலையனேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குலையனேரி, இரட்டைகுளம், சுப்பையாபுரம், பூபாண்டியபுரம், திரிகூடபதி ஆகிய கிராமங்களில் இருந்து தினமும் புறநோயாளிகள் மற்றும் கா்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்கு வருகின்றனா்.

ஆயினும் ஊராட்சியில் இருந்து குடிநீா் வசதி அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் நிலத்தடி நீரை மட்டும் குடிநீராக இங்கு வரும் நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனா். நிலத்தடி நீா் குறையும் காலங்களில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

எனவே, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT