முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சங்கரன்கோவிலில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், சங்கரன்கோவில் டிடிடிஏ பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாபன் தலைமை வகித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதைதொடா்ந்து மாவட்டச் செயலா், எம்.எல்.ஏ. ஈ. ராஜா ஆகியோா் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 100 போ்திமுகவில் இணைந்தனா். பின்னா் வீரமாமுனிவா் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள விண்மீன் மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் கண்ணன், சோம.செல்வப்பாண்டியன், ஒன்றியச் செயலா் வெற்றிவிஜயன், பொதுக்குழு உறுப்பினா் அன்புமணி கணேசன், தொமுச மண்டல அமைப்பாளா் நெல்சன், இல.சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments