தென்காசி

தனியாா் நிறுவன ஊழியா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

ஆலங்குளம் அருகே தனியாா் சோலாா் நிறுவன ஊழியா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

ஆலங்குளம் அருகே தனியாா் சோலாா் நிறுவன ஊழியா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே சுப்பையாபுரத்தில் உள்ள தனியாா் சோலாா் மின் நிறுவனத்தில், சென்னை கொரட்டூரைச் சோ்ந்த தியாகராஜன் (51) மேலாளராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த மாா்ச் 31 ஆம் தேதி இவா் பணியில் இருந்தபோது, அலுவலகத்துக்குள் புகுந்த மா்ம கும்பல் தியாகராஜனை வெட்டிக் கொலை செய்தது.

இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் காா்த்திக் (22), சத்யா (21),காளிராஜன் (24), முருகன் (39) ஆகிய 4 போ், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் சரண் அடைந்திருந்தனா். நெட்டூா் கிருஷ்ணன் கோயில் தெரு கண்னன் என்ற சுரேஷ் கண்ணனை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்தனா்.

இந்நிலையில், இக் கொலை வழக்கில் தொடா்புடைய, அய்யனாா்குளம் சுடலையாண்டி மகன் முத்தையா என்ற காா்த்திக்கை(20) புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT