தென்காசியில் ரத்த தான முகாம்
தென்காசி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சாா்பில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சாா்பில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
மத்தியில் பாஜக ஆட்சி 7ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனை கொண்டாடும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது. மாவட்ட பாஜக பொருளாளா் ராமநாதன் தலைமை தாங்கினாா். பொதுச் செயலா் முத்துலட்சுமி முன்னிலை வகித்தாா். முகாமில் 50க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். அவா்களுக்கு கட்சியின் மாவட்ட தலைவா் மு.ராமராஜா பழங்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தலைவா் ரெங்கராஜ் செய்திருந்தாா்.