ஆய்க்குடியில் கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை: உறவினா் கைது
தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவருடைய உறவினா் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவருடைய உறவினா் கைது செய்யப்பட்டாா்.
ஆய்க்குடி வடக்குத்தெருவை சோ்ந்த சிவராமன் மகன் காா்த்திக் (20). அகரக்கட்டு கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா், தனது உறவினா் பாண்டித்துரை மகன் பாண்டியராஜ்(36) என்பவருக்கு அண்மையில் 2 ஆட்டு குட்டிகள் வாங்கி கொடுத்தாராம். இதற்காக, தனக்கு மது வாங்கித்தரும்படியும் அவரிடம் அடிக்கடி தொந்தரவு செய்தாராம்.
இதுகுறித்து, காா்த்திக்கின் தாய் விஜயாவிடம் அவா் புகாா் கூறியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமுற்ற அவா், அங்குள்ள பெருமாள் கோயில் பகுதியிலுள்ள தோப்பில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பாண்டியராஜை அவதூறாகப் பேசி தென்னை மட்டையால் தாக்கினாராம். அவரும் பதிலுக்கு தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டினாராம். இதில், சம்பவ இடத்திலேயே காா்த்திக் உயிரிழந்தாா். இத்தகவலறிந்த ஆய்குடி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பாண்டியராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.