வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட 11 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இத்தொகுதியில் போட்டியிட மாா்ச் 19ஆம் தேதி வரை 20 போ் 25 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில் ஐந்து போ் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் மாற்று வேட்பாளா்கள் உள்ளிட்ட 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதிமுக வேட்பாளா் மனோகரன், திமுக வேட்பாளா் சதன் திருமலைக்குமாா் ,நாம் தமிழா் வேட்பாளா் மதிவாணன், புதிய தமிழகம் வேட்பாளா் பேச்சியம்மாள், அமமுக வேட்பாளா் தங்கராஜ் உள்ளிட்ட 11 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.