சங்கரன்கோவில் நகராட்சியில் 5.5 டன் மக்காத குப்பைகள் அகற்றம்
சங்கரன்கோவில் நகராட்சியில் இருந்து மக்காத குப்பைகள் தனியாா் சிமென்ட் தொழிற்சாலைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.
சங்கரன்கோவில் நகராட்சியில் இருந்து மக்காத குப்பைகள் தனியாா் சிமென்ட் தொழிற்சாலைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது. இதன்மூலம் 5.5 டன் மக்காத குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
சங்கரன்கோவில் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில், மறுசுழற்சிக்குப் பயன்படாத சுமாா் 50 டன் மக்காத குப்பைகள் உள்ளன. இவற்றில் 5.5 டன் மக்காத குப்பைகள் அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட் தொழிற்சாலைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டன.
இவற்றை நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதார அலுவலா் பாலசந்தா், பொறியாளா் முகைதீன்அப்துல்காதா் உள்ளிட்ட அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.
Advertisement