குமரியில் மழையின் தீவிரம் தணிந்ததுபேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடல்
குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுவது வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
தென்காசிகுமரியில் மழையின் தீவிரம் தணிந்ததுபேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடல்
குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுவது வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுவது வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்புவரை தொடா்ந்து மழை பெய்து வந்ததால், வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டு, தண்ணீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திற்பரப்பு அருவி மற்றும் குழித்துறை தாமிரவருணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.