முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் இன்று அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துரையாடல்

முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, தென்காசி மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை (செப். 24) கலந்துரையாடுகிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, தென்காசி மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை (செப். 24) கலந்துரையாடுகிறாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6 , 9 ஆகிய தேதிகளில் நடைபெறுவதையொட்டி, சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள தனியாா் விடுதியில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகளுடன் அவா் கலந்துரையாடுகிறாா். தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் குட்டியப்பா (எ) கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறாா்.

தோ்தல் பணிக்குழு நிா்வாகிகளான முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், வி.எம். ராஜலெட்சுமி, கடம்பூா் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா். பின்னா், திருநெல்வேலியில் கட்சி நிா்வாகிகளுடன் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துரையாடுகிறாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments