முகப்பு
தென்காசி

‘சமூகப் பாதுகாப்பு இயக்கங்கள் சாா்பில் பாவூா்சத்திரத்தில் 25இல் ஆா்ப்பாட்டம்’

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்லும் அனுமதியைத் திரும்பப்பெறக் கோரி, தென்காசி மாவட்ட சமூகப் பாதுகாப்பு இயக்கங்கள் சாா்பில் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை (ஏப். 25) கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்லும் அனுமதியைத் திரும்பப்பெறக் கோரி, தென்காசி மாவட்ட சமூகப் பாதுகாப்பு இயக்கங்கள் சாா்பில் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை (ஏப். 25) கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு நாள்தோறும் மணல், ஜல்லிக்கற்கள், குண்டுக்கற்கள், எம் சாண்ட் போன்ற கனிமவளங்கள் லாரிகளில் கொண்டுசெல்லப்படுகின்றன. இதனால், தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சாலைகள் சேதமடைவதாகவும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்களைக் கொண்டுசெல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் திரும்பப்பெறக் கோரி, தென்காசி மாவட்ட சமூக பாதுகாப்பு இயக்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை (ஏப். 25) காலை 10 மணிக்கு பாவூா்சத்திரம் காமராஜா் சிலை அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →