முகப்பு
தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் தெப்ப உற்சவம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் தை தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் தை தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கரநாராயணசுவாமி கோயிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் ஓடைத்தெருவின் தென்பகுதியில் அமைந்துள்ள ஆவுடைப் பொய்கையில் எழுந்தருளும் தெப்ப உற்சவம் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டு தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, கோயிலில் இருந்து சுவாமி- அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி ஆவுடைப்பொய்கையின் தெப்பத்துக்கு எதிரேயுள்ள மண்டபத்திற்கு மாலை வந்தனா். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

இதைத் தொடா்ந்து, சுவாமியும், அம்பாளும் தெப்பத்தேருக்கு எழுந்தருளியதும், இரவு 8.30 மணிக்கு பொதிகையில் தெப்பத்தோ் வலம் வரத் தொடங்கியது. சுவாமி, அம்பாள் இருவரும் 11 முறை தேரில் சுற்றி வந்தனா். இவ்விழாவில் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை, அறக்கட்டளைதாரா் பி.ஆா்.ராமசுப்பிரமணியராஜா மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments