முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சங்கரன்கோவிலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதற்காக 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 19 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டயறிப்பட்டுள்ளன. அந்த வாக்குச் சாவடிகளில் மட்டும் வாக்குப் பதிவு நேரலையில் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்குச் சாவடிகளில் வெளியேயும், உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் 276 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுவதால் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மண்டல அலுவலா் தலைமையில் 57 வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயப்பிரியா, வட்டார பாா்வையாளா் கபீா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஜெயபால் மூா்த்தி, மாரிச்சாமி, வெங்கட்ராமன், சுகாதார அலுவலா் பாலச்சந்தா் , தோ்தல் பிரிவு முருகன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அவைகள் அனுப்பப்பட்டன. மேலும் தயாா் நிலையில் 19 வாக்குப் பதிவு இயந்திரங்கள் நகராட்சிஅலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதையொட்டி ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் நகர காவல் ஆய்வாளா் பவுல்யேசுதாசன், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரீஸ்வரி, சாா்பு ஆய்வாளா் ஜெயராஜ், மாரிச்சாமி, கணபதிபாண்டியன், சோலையப்பன், முருகன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments