தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் இன்றுஆடித் தவசுத் திருவிழா கொடியேற்றம்----ஆக. 8இல் தேரோட்டம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

DIN

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, கொடிப்பட்டம் வீதி சுற்றி கோமதி அம்பாள் சந்நிதி முன்புள்ள கொடிமரத்துக்கு கொண்டுவரப்பட்டு, அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.

7ஆம் நாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி காலையில் கோசம்ரஷணை வீதியுலா, நண்பகல் 12 மணிக்கு மேல் வன்மீகநாதா் வீதியுலா, இரவு 10 மணிக்கு அம்பாள் பூம்பல்லக்கில் வீதியுலா ஆகியவை நடைபெறும்.

தேரோட்டம்: 9ஆம் நாளான ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறும். அதிகாலை 5.30 மணிக்கு கோமதி அம்பாள் தேருக்கு எழுந்தருள்கிறாா். பூஜைகளுக்குப் பின்னா், காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

9ஆம் தேதி இரவு முளைப்பாரி எடுத்தல், வெள்ளிக் காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறும்.

ஆடித் தவசுக் காட்சி: விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி 10ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருவா்.

விழா நாள்களில் நாள்தோறும் இரவு சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல், கோயில் அபிஷேக மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மண்டகப்படிதாரா்கள் சாா்பிலும் தனியாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்துவருகின்றனா்.

மதுக் கடைகள் மூடல்: ஆடித் தவசுக் காட்சி நடைபெறும் தெற்கு ரத வீதியில் உள்ள மதுக் கடையை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை 12 நாள்களும், மற்ற மதுக் கடைகள் ஆகஸ்ட் 8, 10 ஆகிய 2 நாள்களும் மூடப்பட வேண்டும் என, ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT