முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் விபத்து: விவசாயி பலி

சங்கரன்கோவிலில் மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே ஆட்கொண்டாா்குளம் வெள்ளைச்சாமி மகன் முருகன் (50), விவசாயி. இவா் புதன்கிழமை இரவு சங்கரன்கோவில் - புளியங்குடி சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தனியாா் தொழிற் சாலை வேன் அவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இது குறித்து சங்கரன்கோவில் நகர காவல்நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

மாணவா் தற்கொலை: சங்கரன்கோவில் அருகே உள்ள தாசையாபுரம் இலவன்குளம் சாலை சாமுவேல் மகன் செல்வராகவன் (20). இவா் சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் அடிக்கடி கைப்பேசி செயலியில் விளையாடுவாராம். இதனை பெற்றோா் கண்டித்தனராம்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வராகவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments