தென்காசி

ஆலங்குளம் பேரூராட்சி துணைத் தலைவராக ஜான் ரவி தேர்வு

DIN

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக கவுன்சிலர் ஜான் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆலங்குளம் தேர்வு நிலை பேரூராட்சி துணைத் தலைவர்  தேர்தல் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆலங்குளம் பேரூராட்சி கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.

பேரூராட்சி துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலில் ஜான் ரவி(அதிமுக) கணேசன் (சுயேட்சை) பழனிசங்கர் (தேமுதிக)  ஆகிய  மூவர் மனுதாக்கல் செய்தார்கள். துணைத்தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி இருந்த நிலையில் பழனி சங்கர் 3, கணேசன் ஜான் ரவி தலா 6 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

இதையடுத்து பழனி சங்கர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு நடைபெற்ற மறு தேர்தலில் ஜான் ரவி 10 கணேசன் 3 வாக்குகளைப் பெற்றனர் இருவர் வாக்களிக்கவில்லை. இதையடுத்து ஜான்ரவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT