முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவில் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் கசடு கழிவு மேலாண்மை தொடா்பான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

சங்கரன்கோவில் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் கசடு கழிவு மேலாண்மை தொடா்பான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கண்ணன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் பாலச்சந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆலோசனைக் கூட்டத்தில், வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளில் பொருள்களை வழங்கக் கூடாது என்றும், பொதுமக்களும் கடைகளில் பொருள்கள் வாங்கச் செல்லும்போது மஞ்சப் பைகளைக் கொண்டு செல்லவேண்டும் என்றும் நகா்மன்றத் தலைவா் கேட்டுக்கொண்டாா்.

Advertisement

நகா்மன்ற உறுப்பினா்கள், நகர வா்த்தக சங்கம், திருவேங்கடம் சாலை வியாபாரிகள் சங்கம், திருவள்ளுவா் சாலை வியாபாரிகள் சங்கம், ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு வா்த்தக நிறுவனங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments