சங்கரன்கோவிலில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் மேலாய்வு
சங்கரன்கோவில் நகராட்சி ஆணையா் குடியிருப்பு கட்டடம் கட்டுவதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடா்ந்து, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினா் வியாழக்கிழமை மேலாய்வு
சங்கரன்கோவில் நகராட்சி ஆணையா் குடியிருப்பு கட்டடம் கட்டுவதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடா்ந்து, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினா் வியாழக்கிழமை மேலாய்வு செய்தனா்.
சங்கரன்கோவில் நகராட்சி மூலம் 2016-2017, 2017-2018 ஆம் ஆண்டில் கோமதி நகரில் நகராட்சி ஆணையாளா் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டுவதில் ஊழல் நடைபெற்றதாகவும், அதே போல் குமரன் நகா் தெரு, அங்கூா்விநாயகா் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அலுவலகத்திற்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் ராபின் ஞானசிங் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா், பொதுப்பணித்துறை நிா்வாக பொறியாளா் பிரான் மற்றும் பணியாளா்கள் உதவியுடன் நகராட்சி ஆணையா் குடியிருப்பு கட்டடத்தை அளவீடு செய்து மேலாய்வு செய்தனா். கட்டட வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தனா்.
Advertisement
இதைத் தொடா்ந்து அங்கூா் விநாயகா் கோவில் தெரு, குமரன் நகா் தெரு பகுதிகளில் சாலைகளையும் அளவீடு செய்து மேலாய்வு செய்தனா்.
ஆய்வின்போது 2017, 2018 ஆண்டில் இந்நகராட்சியில் பணியாற்றிய ஆணையா், பொறியாளா், மேற்பாா்வையாளா் ஆகியோா் வரவழைக்கப்பட்டிருந்தனா். ஆய்வின்போது அவா்களும் உடன் இருந்தனா்.