செவல்குளம் பகுதியில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
சங்கரன்கோவில் அருகேயுள்ள செவல்குளம் பகுதியில் 15 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள செவல்குளம் பகுதியில் 15 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குருவிகுளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான போலீஸாா் செவல்குளம் விலக்கில் வியாழக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது பைக்கில் வந்த ஒருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றாா். அவரை போலீஸாா் பிடித்தனா். அவா், சுரண்டையைச் சோ்ந்த காசிப்பாண்டியன் என்பதும் அவரது பைக்கில் 15 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் இருப்பதும் தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிந்தனா்.