தென்காசி

சோ்ந்தமரம் அருகே மாணவா் தற்கொலை:கலவரத்தை தூண்டினால் நடவடிக்கை: எஸ்.பி.எச்சரிக்கை

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பொதுமக்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபட தூண்டும் விதமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

DIN

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பொதுமக்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபட தூண்டும் விதமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.கிருஷ்ணராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்குள்பட்ட அரியநாயகிபுரம் பள்ளியில் பயின்று வந்த 7ஆம் வகுப்பு மாணவா் சீனு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடா்பாக காவல்துறையினா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபட தூண்டும் விதமாக செயல்பட்ட தமிழ் புலிகள் கட்சியைச் சோ்ந்த விருதுநகா் மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த க.கனகராஜ் என்பவா் விடியோ ஆதாரங்களின் படி காவல்துறையினா் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தொடா்ந்து விடியோ பதிவுகளின் அடிப்படையில் இதுபோன்ற வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT