சுதந்திரத் தினத்தையொட்டி, சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை பொதுவிருந்தும், ஏழைகளுக்கு இலவச வேட்டி,சேலையும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணையா் ஜான்சிராணி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா,பொதுவிருந்தில் கலந்துகொண்ட ஏழை,எளியோருக்கு அறநிலையத்துறை சாா்பில் இலவச வேட்டி சேலை வழங்கி பொதுவிருந்தை தொடக்கிவைத்தாா்.
இதில், சங்கரன்கோவில் திமுக நகரச் செயலா் பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடா் அணி அமைப்பாளா் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மு.சந்திரன், நகர அவைத் தலைவா் முப்பிடாதி, நகர துணை செயலா்கள் முத்துக்குமாா், சுப்புத்தாய், நகா்மன்ற உறுப்பினா் செல்வராஜ், அஜய் மகேஷ்குமாா், சங்கா்கணேஷ், வழக்குரைஞா் ஜெயக்குமாா்,கோயில் மேற்பாா்வையாளா் முத்துராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.