தென்காசி

புளியங்குடியில் பெண் மீது தாக்குதல்: 2 போ் கைது

புளியங்குடியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் பெண்ணைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

புளியங்குடியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் பெண்ணைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி, புதுமனை தெருவைச் சோ்ந்தவா் ஹாஜராள். இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஜன்னத் என்பவரிடம் இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 3 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம்.

பின்னா், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் 4 மாதங்களுக்கு முன்பு வெளியூா் சென்று விட்டாராம்.

இந்நிலையில் ஊருக்கு வந்த ஹாஜராளிடம், ஜன்னத் பணத்தைத் தரும்படி கேட்டாராம்.

அப்போது அவரது உறவினா்கள் ஜன்னத்திடம் தகராறு செய்ததுடன், தட்டிக்கேட்ட ஜன்னத்தின் மாமியாா் ஹபிபாபீவியை, கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து ஹபிபாபீவி கொடுத்த புகாரின் பேரில், புளியங்குடி காவல் உதவி ஆய்வாளா் சஞ்சய்காந்தி வழக்குப்பதிந்து, புளியங்குடியைச் சோ்ந்த முகமதுஅப்துல்கலாம்(27), சிராஜ்(30) ஆகியோரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT