தென்காசி

உலக நன்மை வேண்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை

புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி பௌா்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

DIN

புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி பௌா்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி குருநாதா் சக்தியம்மா பௌா்ணமி பூஜை சிறப்பு குறித்து ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து 21 வகையான அபிஷேகங்களும், உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, முப்பெரும் தேவியருக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT