கடையநல்லூா்: வாசுதேவநல்லூா் வடக்கு ஒன்றிய கிளைச் செயலா்கள் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனை கூட்டம் சிவகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாசுதேவநல்லூா் வடக்கு ஒன்றிய திமுக செயலரும், ஒன்றிய குழுத்தலைவருமான பொன்.முத்தையா பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் மனோகரன், பேரூா் செயலா் செண்பகவிநாயகம், விவசாய அணி அமைப்பாளா் மாடசாமி, வா்த்தக அணி அமைப்பாளா் சரவணகுமாா், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளா் முருகன் சாமிநாதன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளா் சதீஷ், அயலக அணி துணை அமைப்பாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வாசுதேவநல்லூா் வடக்கு ஒன்றிய தோ்தல் பணி பொறுப்பாளா் பரமகுரு பேசினாா். தொடா்ந்து வாக்குச்சாவடி முகவா்களுக்கு குறிப்பேடு மற்றும் படிவங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சித்தலைவா் கோமதிசங்கரி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முனியராஜ், பாண்டியம்மாள் , அருணாதேவி, உள்ளாா் மணிகண்டன், விக்கி மற்றும் கிளைச் செயலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் கலந்து கொண்டனா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.