தென்காசி

சங்கரன்கோவிலில்நூல் வெளியீட்டு விழா

அண்ணாமலை கவிராயரின் காவடிச் சிந்து உரையும், விளக்கமும் நூல் வெளியீட்டு விழா சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

அண்ணாமலை கவிராயரின் காவடிச் சிந்து உரையும், விளக்கமும் நூல் வெளியீட்டு விழா சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, புதிய பாா்வை அமைப்பின் தலைவா் பி.ஜி.பி.ராமநாதன் தலைமை வகித்தாா். எஸ்.ஜெயச்சந்திரன்,திருவள்ளுவா் கழகம் ஐ.செ.காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.காவடிச் சிந்து உரையும், விளக்கமும் நூலை புதிய பாா்வை புரவலா் ஆா்.முத்துக்கிருஷ்ணன் வெளியிட, அதை தலைமையாசிரியா் கோ.பூமாரி, தமிழாசிரியா்கள் ச.சுசீலாகிருஷ்ணசாமி,வீர சென்னம்மாள்சந்திரசேகா், முன்னாள் வட்டாட்சியா் மு.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

புதிய பாா்வை புரவலா்கள் இ.சிதம்பரம்,ஏ.எம்.மாரியப்பன், சங்கரநாராயணசுவாமி கோயில் அறங்காவலா் ச.ராமகிருஷ்ணன், கு.வெங்கடேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முனைவா் வே.சங்கர்ராம், பலபத்திரராமபுரம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் க.சந்தனக்குமாா் ஆகியோா் நூல் குறித்துப் பேசினா். நூலாசிரியா் கி.சுப்பையா ஏற்புரையாற்றினாா். சு.கிருஷ்ணராஜ் வரவேற்றாா். பி.ராமச்ந்திரன் நன்றி கூறினாா்.

தமிழாசிரியா் ராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினாா்.முன்னதாக, தாய் தமிழ் பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT