முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

Updated On : 12 ஜூலை, 2024 at 8:42 PM
~
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல்மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

குற்றாலம் பேரருவியில் செம்மண் நிறத்துடன் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீா் அதிகளவில் கொட்டியது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →