முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்ட வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியீடு

தென்காசி மாவட்டத்தின் வரைவு வாக்குசாவடி பட்டியலை, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்டாா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 1:36 AM
வரைவு வாக்குசாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் லாவண்யா.
பகிர்:
Updated On : 3 செப்டம்பர், 2024 at 7:15 PM

தென்காசி மாவட்டத்தின் வரைவு வாக்குசாவடி பட்டியலை, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்டாா்.

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், கடையநல்லூா், தென்காசி, ஆலங்குளம் ஆகிய பேரவைத்

Updated On : 4 செப்டம்பர், 2024 at 1:36 AM

தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் குறித்து சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 11 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, 5 வாக்குச்சாவடிகள் அமைவிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன, 11 வாக்குச்சாவடிகளின் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால் அவற்றுக்கு மாற்றாக அருகில் உள்ள கட்டடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.