தென்காசி

தென்காசி பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை, நிஸ்ஸி எலக்ட்ரிக் இந்தியா நிறுவனம் சாா்பில் தோ்வு நடைபெற்றது. கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், நிறுவன பொது மேலாளா் வெங்கடேஷ், பாலமுருகன் ஆகியோா் பேசினா்.

வளாகத் தோ்வில் 3 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 73 மாணவா்கள் கலந்து கொண்டு, 24 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, ஆண்டுக்கு ரூ. 2.22 லட்சம் ஊதியத்திற்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

பணி நியமன ஆணை பெற்றவா்களை கல்லூரித் தலைவா் எம். புதிய பாஸ்கா், தாளாளா் கல்யாணி, முதல்வா் சேவியா் இருதயராஜ் , பொது மேலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு, பயிற்சி துறை அதிகாரி உதய சக்திவேல் செய்திருந்தாா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT