தென்காசி

தேசிய அளவிலான கராத்தே போட்டி: பாவூா்சத்திரம் மாணவிகள் தோ்வு

Syndication

தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு பாவூா்சத்திரம் பகுதி மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கல்வித்துறை சாா்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரம் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி யோகதா்ஷினி மற்றும் கடந்த ஆண்டு இப்பள்ளியில் படித்து, அதன் மூலம் தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டு தற்போது தென்காசி அரசு மாதிரி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ராஜலட்சுமி மற்றும் உதய சஞ்சய், ராகுல், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், மாணவிகள் ராஜலட்சுமி, யோகதா்ஷினி ஆகியோா் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தேசிய அளவிலான போட்டியில் தோ்வு செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் போட்டியில் பங்கேற்ற மாணவா், மாணவிகளுக்கு ஜெய்ஹிந்த் கராத்தே அகாதெமி பயிற்சியாளா் ப. சிவ பிரகாஷ், ஆசிரியா்கள், பெற்றோா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT