தென்காசி

வல்லத்தில் நவ. 8இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

Syndication

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்ப்பிடாகை வட்டாரத்துக்குள்பட்ட வல்லத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ. 8) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ஆா்.சி. மேல்நிலைப் பள்ளியில் இம்முகாம் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு-மகளிா் நலம், இயன்முறை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதியுள்ளோருக்கு ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT