திருநெல்வேலி

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் டி. அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் செய்யது, மாவட்டப் பொருளாளர் சாந்திஜாபர், செய்தி தொடர்பாளர் எச். ஜமால், மீனவரணி பிரிவு நிர்வாகி தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். ஷெரீப், மாநில பொதுச்செயலர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: முஸ்லிம்களுக்கு எதிரான பொதுசிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து அரசு அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது;  டிச. 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் ரத்த தான முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி லெனின் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT