திருநெல்வேலி

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உயர்நிலைக் குழுக் கூட்டம்

DIN

திருநெல்வேலியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட உயர்நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செ. பால்ராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் வீ. பார்த்தசாரதி, ஆசீர்சார்லஸ்நீல், ஜெ. பொன்னுத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சென்னையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பது. கோரிக்கையை வலியுறுத்தி ஆக. 22 இல் நடைபெற இருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் 100 சதவீதம் கலந்துகொள்வது.
இப்போராட்டம் குறித்து ஆக. 16 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு சென்று சந்திப்பு இயக்கம் நடத்துவது.
அன்றைய தினம் இம்மாவட்டத்திலுள்ள 15 வட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மேலும் திட்டமிட்டப்படி வரும் செப். 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது குறித்து ஆக. 26, 27 ஆம் தேதிகளில் ஆயத்த மாநாடுகள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT