முகப்பு
திருநெல்வேலி

கருப்பு பண ஒழிப்பு: இந்து தேசிய கட்சியினர் வரவேற்பு

கருப்பு பண ஒழிப்பை வரவேற்று இந்து தேசிய கட்சியினர் பழைய ரூபாய் நோட்டுகளின் நகல்களை கிழித்து தாமிரவருணி ஆற்றில் எறிந்ததோடு, தர்ப்பணமும் செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

கருப்பு பண ஒழிப்பை வரவேற்று இந்து தேசிய கட்சியினர் பழைய ரூபாய் நோட்டுகளின் நகல்களை கிழித்து தாமிரவருணி ஆற்றில் எறிந்ததோடு, தர்ப்பணமும் செய்தனர்.
 நவ.8 ஆம் தேதியை இந்து தேசிய கட்சியினர் கருப்பு பண ஒழிப்பு தினமாக கொண்டாடினர். அதைத் தொடர்ந்து கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரவருணி ஆற்றில் பழைய ரூபாய் நோட்டுகளின் நகல்களை கிழித்து எறிந்ததோடு,   தர்ப்பணம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு  இந்து தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலர் இசக்கி ஐயப்பன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.எஸ்.மணி, மாநில அமைப்புச் செயலர் வன்னி முருகேசன், மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →