முகப்பு
திருநெல்வேலி

மாநில கராத்தே போட்டி: நெல்லை வீரர்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருநெல்வேலி வீரர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருநெல்வேலி வீரர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
ஆலன் திலக் சிட்டோரியோ கராத்தே பள்ளி சார்பில் 8 ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டிகள் திருச்செந்தூரில் அண்மையில் நடைபெற்றது.
 திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். இப் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட கென்வா சிட்டோரியோ கராத்தே பள்ளியின் சார்பில் தலைமை பயிற்சியாளர் சீ கான் சேக் முகம்மது தலைமையில் வீரர்கள் பங்கேற்றனர். கட்டா மற்றும் குமித்தே பிரிவுகளில் 14 தங்கப்பதக்கங்களையும், 4 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்களையும் திருநெல்வேலி வீரர்-வீராங்கனைகள் வென்றனர். சிறப்பிடம் பெற்றவர்களை பயிற்சியாளர்கள் பேட்டை ஹக்கீம், ஆசிக்அலி, பெற்றோர்கள் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →