முகப்பு
திருநெல்வேலி

ஆரோக்கிய வாழ்வு: விழிப்புணர்வு நாடகப் போட்டி

ஆரோக்கிய வாழ்வுக்கான விழிப்புணர்வு குறு நாடகப் போட்டி  திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

ஆரோக்கிய வாழ்வுக்கான விழிப்புணர்வு குறு நாடகப் போட்டி  திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், ஆவின் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், "ஆரோக்கிய வாழ்விற்கு பாலின் பங்கு' எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான குறு நாடகப் போட்டி நடைபெற்றது.
இளையோர் பிரிவு ( 10 ஆம் வகுப்பு வரை), மூத்தோர் பிரிவு ( பிளஸ் 1, பிளஸ் 2) என இருபிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலுமிருந்து 100- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
போட்டியை ஆவின் மேலாளர் (நிர்வாகம்) சாந்தி தொடங்கிவைத்தார். அறிவியல் மைய அலுவலர் கே. நவராம்குமார், ஆவின் மேலாளர் (வணிகம்) சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரும்புகள் அறக்கட்டளை இயக்குநர் மதிவாணன், தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் நாராயணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இப்போட்டியில், பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி, கடயாலுருட்டி விஸ்டம் மெட்ரிக் பள்ளி ஆகியவை முதலிடமும், பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி ஆகியன 2 ஆவது இடமும், வடக்கன்குளம் நேரு மேல்நிலைப் பள்ளி, சின்மயா மெட்ரிக் பள்ளி ஆகியவை  3 ஆவது இடமும் பெற்றன.
வெற்றிபெற்றவர்களுக்கு சென்னை தனியார் நிறுவன சேர்மன் ரமேஷ், பொதுமேலாளர் ரெங்கநாததுரை ஆகியோர் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பி. மாரிலெனின் வரவேற்றார். கல்வி உதவியாளர் பொன்னரசன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →