திருநெல்வேலி

சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி வகுப்பு

பாளையங்கோட்டை, திருநெல்வேலியில் சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி வகுப்புகள் அண்மையில் நடைபெற்றன.

DIN

பாளையங்கோட்டை, திருநெல்வேலியில் சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி வகுப்புகள் அண்மையில் நடைபெற்றன.
திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் பாளையங்கோட்டை சைவசபை, திருநெல்வேலி நகரம் ஈசான மடத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பேராசிரியை உ.விஜயலட்சுமி, திருமுறை பதிகங்களுக்கு விளக்கம் அளித்ததோடு, திருக்கோயில்களின் சிறப்புகளை விளக்கினார். தேவார இன்னிசை ஆசிரியர் சோ.சொக்கலிங்கம் பண்ணோடு பதிகம் பாட பயிற்சி அளித்தார்.
மாணவர்கள் மாகேஸ்வர பூஜை நடத்தினார்கள். வகுப்புகளில் தலா 60 மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முத்துசுவாமி தலைமையில் முத்துக்குமாரசாமி, ராம்குமார், கணேசன், கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அடுத்தப் பயிற்சி வகுப்பு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT