திருநெல்வேலி

கடையநல்லூரில் திராட்சையில் பரவும் நோய்: விவசாயிகள் வேதனை

DIN

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டாரப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள திராட்சையில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கடையநல்லூர் திராட்சைக்கு என்று தனி மவுசு உண்டு. இங்குள்ள திராட்சைகள் மிகவும் திரட்சியாக இருக்கும் என்பதால் வெளிமாநிலங்களுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், திராட்சையை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லாதது, தண்ணீர் பற்றாக்குறை, போதிய விலை விவசாயிகளுக்கு கிடைக்காதது போன்ற காரணங்களால் திராட்சை சாகுபடியின் அளவு பல நூறு ஏக்கரிலிருந்து படிப்படியாக குறைந்து தற்போது வெறும் 25 ஏக்கர் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலும், 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ள திராட்சையில் தற்போது கருப்பட்டி நோய் தாக்கியுள்ளதாகவும், அதனால் திராட்சை பழங்கள் உதிர்ந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே, வேளாண்துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT