சிவகிரி வனப்பகுதியில் விலங்கினங்கள் கணக்கெடுப்பு
திருநெல்வேலி வன உயிரினச் சரணாலயம் சார்பில் சிவகிரி வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் வன உயிரினக் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.
திருநெல்வேலி வன உயிரினச் சரணாலயம் சார்பில் சிவகிரி வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் வன உயிரினக் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.
அரசு வனப்பகுதிகளில் உள்ள விலங்கினங்கள் குறித்து கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். மாமிசங்களை உண்டு வாழும் புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகள், தாவரங்களை உண்டு வாழும் உயிரினங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை, மாவட்ட வன அலுவலர் சம்பத் உத்தரவின்பேரில், சிவகிரி வனச்சரக அலுவலர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார். சிவகிரி வனச்சரகத்தில் உள்ள தேவிபட்டணம், சுனைப்பாறை, கோம்பையாறு ஆகிய பீட்கள் உள்ளடங்கிய சிவகிரி வடக்குப் பகுதிக்கு வனவர் முருகன், வனக்காப்பாளர் சிவஞானபாண்டியன், திருவேட்டை, லட்சுமணன் ஆகியோரும், கருப்பசாமி கோயில், உள்ளார் ஆகிய பீட்களை உள்ளடக்கிய சிவகிரி தெற்குப் பிரிவுக்கு வனவர் லூமிக்ஸ் தலைமையில் வனக்காப்பாளர்கள் அஜித், முனியசாமி, வேட்டைத் தடுப்புக் காவலர்கள், தன்னார்வலர்கள் 6 பேரும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இப்பணி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நடைபெறும்.