திருநெல்வேலி

குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா: 19 இல் கொடியேற்றம்

DIN

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா வியாழக்கிழமை (ஏப்.19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இத்திருவிழா 19 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் முருகப்பெருமான் திருவீதி உலா நடைபெறும். 25 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் அருள்மிகு முருகப்பெருமானின் உருகுச்சட்ட சேவையும், மாலை 5 மணிக்கு அருள்மிகு முருகப் பெருமான் தங்கச் சப்பரத்தில் சிகப்பு சாத்தி, திருநெல்வேலி மாநகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
26 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு வெள்ளைச் சாத்தியும், மாலை 6 மணிக்கு பச்சை சாத்தியும் காட்சி அளித்தல் வைபவம் நடைபெறும். 28 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெருமான் தேருக்கு எழுந்தருளும் வைபவமும், அதைத் தொடர்ந்துத் தேரோட்டமும், 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30 க்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT