செங்கோட்டை ஹோட்டலில் வருமான வரித் துறை சோதனை
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பிரானுர் பார்டரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பிரானுர் பார்டரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
குற்றால சீசன் நேரம் மட்டுமன்றி எப்போதும் இந்த ஹோட்டலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும்.
இந்த நிலையில் புதன்கிழமை மாலை இந்த ஹோட்டல் உள்பட உரிமையாளரின் வீடுகளிலும் பிற்பகல் 3 மணி முதல் நெல்லை, மதுரை, குமரி, கொல்லம் ஆகிய பகுதிகளை சார்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.