திருநெல்வேலி

செங்கோட்டை நூலகத்தில் குரூப்-4 இலவச மாதிரித் தேர்வு

DIN

செங்கோட்டை நூலக வாசகர் வட்டம்,  விழுதுகள் அறக்கட்டளை சார்பில்  குரூப் - 4 தேர்வுக்கான இலவச  மாதிரித் தேர்வு ஆக. 11, 18, 24 ஆகிய தேதிகளில்  நடைபெறுகிறது.
செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  காலை 9.30 மணிக்கு இலவச மாதிரித் தேர்வு நடைபெறும்.  11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  கிங்ஸ் அகாதெமியும்,  18ஆம் தேதி ஆகாஷ் அகாதெமியும்,  24ஆம் தேதி சனிக்கிழமை வெற்றி அகாதெமியும் இணைந்து தேர்வுகளை நடத்துகின்றன.
தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவச பயிற்சி தொகுப்பு கையேடுகளும்,  தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் பெறும் 3 நபர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். எவ்வித கட்டணமும் கிடையாது.    தேர்வு எழுதும் அனைத்து மாணவர், மாணவிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நூலகர் ராமசாமி கேட்டு கொண்டுள்ளார்.  மேலும் விவரங்களுக்கு, 9486984369 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT