பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நூலக ஆணைக்குழு, திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நூலகத்துறை, சென்னை ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் இந்த மாதிரி தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கும்.
தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் 9626272890 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.