திருநெல்வேலி

செப். 1இல் தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு: அமமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டம் தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டம் தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் சுமதிகண்ணன், மாவட்ட துணைச் செயலர் பிச்சம்மாள், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
செப்டம்பர் 1 ஆம் தேதி பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வரும் கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு மாவட்ட எல்லையான முறம்பு பகுதியில் சிறப்பான  வரவேற்பு அளிப்பது. விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கு செப்டம்பர் 9, 23, அக்டோபர் 7, 14 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறுகிறது. எனவே, நிர்வாகிகள் புதிய வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அடவிநயினார் மற்றும் கருப்பாநதி அணைகளிலிருந்து குளத்திற்கு தண்ணீர் செல்லக்கூடிய அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் வீணாகிறது. எனவே, தண்ணீர் வீணாகாமல் விரைந்து குளங்களுக்கு செல்லும் வகையில், கால்வாய்களின் இருபுறமும் சிமென்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மீரான், பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார், வழக்குரைஞர் திருமலைகுமார், சேக், ஒன்றியச் செயலர் பண்டாரம், துரைபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் உச்சிமாகாளி வரவேற்றார். மணிகண்டன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT