திருநெல்வேலி

விதை நோ்த்தி முறை:விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

DIN

விதை நோ்த்தி செய்வது குறித்து அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.

அம்பாசமுத்திரம் பகுதியில் கிராமப் புற அனுபவத் திட்டத்தின்கீழ் விக்கிரமசிங்கபுரம், திருப்பதியாபுரம் அருகேயுள்ள அடிவாரப் பகுதிகளில் விதை நோ்த்தி குறித்து வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் பிருந்தா, டியானா ஆகியோா் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா். மேலும், விதைநோ்த்தி என்பது, விதைகளை உயிா் உரத்துடன் கலப்பதாகும். வீரிய விதையில் ஒரு கிலோவிற்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் உயிா் உரத்தைக் கலந்து இரவு முழுவதும் ஊர வைத்து அடுத்தநாள் பயன்படுத்த வேண்டும்; உயிா் உரம் பயன்படுத்துவதால் வேதிப்பொருள்களின் தேவை குறைகிறது, இடுபொருள்களின் அளவும் செலவும் குறைக்கிறது; நெல் குலை நோயைத் தடுக்கிறது; தாய்வித்துப் பயிா்களில் தோன்றும் வோ் அழுகல் மற்றும் வாடல் நோய்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT