திருநெல்வேலி

களக்காடு அருகே சேதமடைந்த பாலம் தற்காலிகமாக சீரமைப்பு

DIN

களக்காடு அருகே மழையால் சேதமடைந்த பாலம் செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

களக்காட்டிலிருந்து மலைப் பகுதியில் உள்ள தலையணைக்குச் செல்லும் சாலையில் மூங்கிலடியில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே பாலம் உள்ளது. கடந்த சனிக்கிழமை பெய்த மழையால் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த பாலம் சேதமடைந்தது. இதையடுத்து, அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டு பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் பலத்த மழை பெய்து கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் பாலம் மேலும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே சேதமடைந்த பாலத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, முழுமையாக சீரமைக்கவும், கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT